பொரளை பகுதியில் பெறுமதியான போதை மாத்திரைகளை விற்பனை செய்ய திட்டமிட்ட சந்தேக நபர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்போது 44 வயதுடைய சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, குறித்த நபர் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தார்.
இன்னிலையில் கைதான சந்தேகநபரிடமிருந்து 5,99,000 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகளின் மொத்த பெறுமதி சுமார் 6 கோடி எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக, மன்னார் பகுதியில் வசித்து வரும் சுஜி என்ற நபர் படகொன்றில் வந்து சிலாவத்துறை பாலத்திற்கு அருகில் வைத்து வழங்கியதாக தெரிவித்தார்.
பின்னர், அவரது அறிவுறுத்தலின் பேரில் போதை மாத்திரைகள் கொழும்பு பகுதிக்கு கொண்டு வரப்பட்டதாக பொலிஸாரிடம் தெரிவித்தார்.
இந்நிலையில், சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
