தன்னிடமுள்ள மிக முக்கியமான பாதுகாப்பு விடயங்கள் தொடர்பான ஆவணங்களை கையளிப்பதற்காக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தினை சந்திப்பதற்கு அனுமதி கோரியுள்ளதை தொடர்ந்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஆவணங்களை மறைத்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
பாதுகாப்பு அடிப்படையில் மிகவும் முக்கியமான ஆவணங்களை பகிரங்கப்படுத்துவதற்கு தயாரில்லை என தெரிவித்துள்ள உதயகம்மன்பில இதன்காரணமாக அமைச்சரை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதன்பின்னர் அமைச்சருக்கு குறுஞ்செய்தியை அனுப்பியதாகவும் அதற்கும் பதில் இல்லை என உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக அவரை தொடர்புகொள்வதற்கான அனுமதியை கோரி பதிவுத் தபால் மூலம் கடிதமொன்றை அனுப்பினேன், என்னிடம் உள்ள ஆவணங்களை பொறுப்பான முறையில் கையளிக்க விரும்புகின்றேன் எனவும் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.