லண்டன் - கொழும்பு விமான சேவை..

tubetamil
0

 லண்டனுக்கும்(London) கொழும்புக்கும்(Colombo) இடையிலான விமானப் பாதையை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்(SriLankan Airlines) மாற்றம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதை அடுத்து ஈராக் வான்வெளியைத் தவிர்ப்பதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.


அதன்படி, கொழும்பில் இருந்து லண்டனுக்கான விமானங்கள் எகிப்து வான்வெளி ஊடாக பயணிக்க உள்ளதாக  தீர்மானிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், குறித்த தீர்மானத்தினால் அந்த விமான பயணத்தின் நேரம் அண்ணளவாக 30 நிமிடங்கள் அதிகரிக்கும் என ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், விமானத்திற்கான எரிபொருள் பாவனையும் அதிகரிக்கும் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கூறியுள்ளது.   

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top