காட்டு யானை தாக்கி வான் சாரதி மரணம்..!

tubetamil
0

 ஹயஸ் வான் ஒன்றை காட்டு யானை தாக்கியதில் வானின் சாரதி உயிரிழந்துள்ளார்.

பொலனறுவை, கிரித்தல - பக்கமுன பிரதான வீதியில் சோமியேல் பகுதியில் பயணித்த வானே காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.

இந்தப் பரிதாபகரமான சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக பக்கமுன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் பொலனறுவை, பலுகஸ்தமன - சேவாகம பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய வானின் சாரதியே உயிரிழந்துள்ளார். 

காட்டு யானை தாக்கி வான் சாரதி மரணம்! | Wild Elephant Attacks Van Driver Death

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிரித்தல - பக்கமுன பிரதான வீதியில் சோமியேல் பகுதியில் காட்டு யானை ஒன்று வீதியை கடக்க முற்பட்டபோது அவ்வழியாகப் பயணித்த ஹயஸ் வான் ஒன்று காட்டு யானை மீது மோதியுள்ளது.

பின்னர், காட்டு யானையானது அந்த வானைத் தாக்கியுள்ள நிலையில் வாகனம் அருகில் உள்ள ஆற்றில் கவிழ்ந்து வீழ்ந்துள்ளது.

இதன்போது, வானில் சாரதி மாத்திரமே இருந்துள்ளார் என்றும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுற்றுலாவுக்குக்கு சென்ற சிலரை வீட்டில் இறக்கி விட்டு மீண்டும் வீடு நோக்கிப் பயணித்த வானே தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top