எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக வைத்தியர் அர்ச்சுனா கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் (10) நண்பகல் 12 மணியளவிலேயே குறித்த கட்டுப்பணத்தை அவர் செலுத்தியுள்ளார்.
குறித்த இதேவேளை வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நாளை நண்பகல் 12 மணியுடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.