தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வரும் நிலையில் தமிழக வெற்றிக் கழகம் மாநாடு நடைபெறும் இடம் மழை காரணமாக சேறும் சகதியுமாக காணப்படுகிறது
இந்நிலையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு 27 ஆம் திகதி க்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலை என்ற இடத்தில் நடைபெறவுள்ள நிலையில் மாநாட்டுக்கான மேடை அமைப்பு பணிகள் அந்த கட்சியின் செயலாளர் புஸ்சி ஆனந்த்தின் மேற்பார்வையில் இரவு-பகலாக நடந்து வருகிறது.
குறித்த இதேவேளை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையும், சில இடங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
குறித்த இதேவேளை 15, 16 மற்றும் 17-ந்தேதிகளில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் மாநாடு நடைபெறும் இடம் மழை காரணமாக சேறும் சகதியுமாக காணப்படுகிறது. அக்.27-ந்தேதி மாநாடு நடைபெற உள்ள நிலையில் மழை காரணமாக பணிகளில் தாமதமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
.jpeg)