மானிப்பாய் சங்கு வேலி பகுதியில் வைத்து காணி விற்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த வெளிநாட்டு பிரஜையின் 1 கோடியே 3 லட்சம் ரூபாய் பணம் I ஃபோன் 14 PROMAXகைத்தொலைபேசி, மற்றும் கடவுச்சீட்டு என்பன கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் இருவரை கோபாய் பொலிஸ் பொறுப்பதிகாரியின் கீழ் ஊரெழுப்பகுதியில் வைத்து அதிரடியாக கைது செய்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் இந்த துணிகர சம்பவத்தை மேற்கொண்டுள்ளனர். பணத்தை பறி கொடுத்தவர் சேந்தாங்குளம் பகுதியில் காணியை விற்றுவிட்டு தனது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருக்கையில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. சந்தேகன் அவர்களும் சான்று பொருட்களையும் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை கோபாய் பொலிஸார் முன்னெடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.