ஏழு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி..!!!

tubetamil
0

 பாணந்துறை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் ஏழு மாணவர்கள் தீக்காயங்களுக்கு உள்ளாகி பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த பாடசாலையில் உள்ள விஞ்ஞான ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போதே மாணவர்கள் தீக்காயங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீக்காயங்களுக்கு உள்ளான 12 மற்றும் 13 வயதுடைய சிறுமிகளே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மாணவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை, ஆனால் அவர்களின் முகம், தலை மற்றும் கைகளில் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top