ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் கருணாரத்ன பரணவிதான பொதுத் தேர்தல் பிரசாரத்தில் இருந்து விலகியுள்ளார்.
தேர்தலில் தமக்கு வாக்களிக்க வேண்டாம் என அவர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எனினும் போட்டி தவிர்ப்புக்கான காரணம் இதுவரை அவர் வெளியிடவில்லை.
முன்னதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெருமவும் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர், தேர்தல் போட்டியில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்திருந்தார்.
இதற்கிடையில் ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் பொறுப்பாளர் பதவியில் இருந்து ஹிருனிக்கா பிரேமசந்திரவும் விலகியுள்ளார்.
இதற்கமைய பல அரசியல்வாதிகள் போட்டியை தவிர்த்தும், அரசியலில் இருந்து விலகியும் அல்லது தேசிய பட்டியலில் தமது பெயர்களை இடம்பெறச்செய்துள்ளமை குறிப்படத்தக்கது.