வவுனியாவில் யாழ்ப்பாணம் வந்துகொண்டிருந்த பேருந்து சாரதி மீது தாக்குதல்!

tubetamil
0

 வவுனியாவில் கண்டியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற இ.போ.சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



இந்த தாக்குதல் சம்பவமானது நேற்று வெள்ளிக்கிழமை மாலை 6.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது.


குறித்த தாக்குதலில்  காயமடைந்த சாரதி, பயணிகளுடன் பேருந்தினை வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று முறைப்பாடு செய்துள்ள நிலையில் அந்த  சாரதி, வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இந்த தாக்குதலை மேற்கொண்டவர்கள் தனியார் பேருந்தில் பணியாற்றுபவர்கள் என்று தெரியவந்துள்ளதுடன், அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top