நாடாளுமன்றத்துக்கு அரசியல் கட்சிகளில் இருந்தும் சுயேட்சைக் குழுவில் இருந்தும் மக்கள் ஆணை மூலம் 25 தமிழர்கள் தெரிவாகியுள்ளனர்.
இது குறித்த மேலும் தெரிய வருவதாவது, இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் ஆசனம் ஊடாக வைத்தியர் ப. சத்தியலிங்கத்தைச் சபைக்கு அனுப்புவதற்கு அக்கட்சியின் அரசியல் குழு தீர்மானித்தது.
அத்துடன் தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் வேட்பாளராக இடம்பிடித்த இராமலிங்கம் சந்திரசேகரும் நாடாளுமன்றம் வருகின்றார்.
ஐக்கிய மக்கள் சக்தியும் தமிழர் ஒருவருக்குத் தேசியப் பட்டியலில் இடமளித்தால் அமையவுள்ள நாடாளுமன்றத்தில் 28 தமிழ் எம்.பிக்கள் அங்கம் வகிப்பார்கள்.
ஐக்கிய மக்கள் சக்தி இடமளிக்காவிட்டால் தமிழ் எம்.பிக்களின் எண்ணிக்கை 27 ஆக அமையும். 2020 பொதுத்தேர்தலில் மக்கள் ஆணை மூலம் 25 தமிழ் எம்.பிக்கள் தெரிவாகி இருந்தனர்.
தேசியப் பட்டியல் ஊடாக மூவருக்கு இடமளிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில் கடந்த நாடாளுமன்றத்திலும் 28 தமிழ் எம்.பிக்கள் அங்கம் வகித்தனர்.
இதில் தமிழரசு கட்சி சார்பில் , சிவஞானம் சிறிதரன் (யாழ்ப்பாணம்) - 32,833, இரா. சாணக்கியன் (மட்டக்களப்பு) - 65,458,. ஞானமுத்து ஸ்ரீநேசன் (மட்டக்களப்பு) - 22,773 , இளையதம்பி சிறிநாத் (மட்டக்களப்பு) - 21,202, சண்முகம் குகதாசன் (திருகோணமலை) – 18,470, துரைராசா ரவிகரன் (வன்னி) - 11,215, கவீந்திரன் கோடீஸ்வரன் – 11,962, ப. சத்தியலிங்கம் (தேசியப் பட்டியல்) ஆகுதியோர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் யானை சின்னத்தின் கீழ் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் வேட்பாளர்கள் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டனர்.
இதன்போது ஜீவன் தொண்டமான் 46 ஆயிரத்து 438 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். (கடந்த பொதுத் தேர்தலில் இ.தொ.காவுக்கு இரண்டு ஆசனங்கள் கிடைக்கப் பெற்றன)
அத்துடன் கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு நுவரெலியாவில் மாத்திரமே இரண்டு ஆசனங்கள் கிடைக்கப் பெற்றன.
இதில் பழனி திகாம்பரம் (நுவரெலியா) – 48,018, வீ. இராதாகிருஷ்ணன் (நுவரெலியா) – 42,273 கிடைத்துள்ளன
தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு நுவரெலியா, கண்டி, பதுளை, கொழும்பு ஆகிய மாவட்டங்களில் மொத்தமாக ஆறு ஆசனங்கள் கிடைக்கப் பெற்றிருந்தன)
இதே வேளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (யாழ்ப்பாணம்) – 15,135பெற்றுள்ளார்.
சுயேச்சைக் குழு 17சார்பில் போட்டியிட்ட இராமநாதன் அர்ச்சுனா (யாழ்ப்பாணம்) – 20,487 ஐயும் , செல்வம் அடைக்கலநாதன் வன்னி – 5,695 பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் தேசிய மக்கள் சக்தி ஸ்ரப்பில் ,கிட்ணன் செல்வராஜா (பதுளை) – 60,041,அம்பிகா சாமுவேல் (பதுளை) – 58, 201, கே. பிரபு (மட்டக்களப்பு) – 14,856, கே.இளங்குமாரன் (யாழ்ப்பாணம்) – 32,102, எஸ்.ஸ்ரீ பவானந்தராஜா (யாழ்ப்பாணம்) – 20,430, ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் (யாழ்ப்பாணம்) – 17,579, சரோஜா போல்ராஜ் (மாத்தறை) – 148,379, கிருஷ்ணன் கலைச்செல்வி (நுவரெலியா) – 33,346, எஸ். பிரதீப் – 112,711 (இரத்தினபுரி), அருன் ஹேமச்சந்திர ( திருகோணமலை) – 38,368, செல்வதம்பி திலகநாதன் (வன்னி) – 10,652,மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் – 9,280 (வன்னி), இராமலிங்கம் சந்திரசேகர் (தேசியப் பட்டியல்) ஆகியோர் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.