இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியுடன் 191 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆகியுள்ளது.
இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் ஆரம்பமாகியுள்ளது. இந்த பி[போட்டியிலேயே தென்னாப்பிரிக்க அணி தோல்வியை தழுவியுள்ளது.
தென் ஆப்பிரிக்கா அணி முதலில் களமிறங்கியது. மார்க்ரம் (9), ஸோர்சி (4) ஓட்டங்களில் ஆட்டமிழக்க, ஸ்டப்ஸை 16 ஓட்டங்களில் லஹிரு குமாரா வெளியேற்றினார்.
அதனைத் தொடர்ந்து வந்த வீரர்கள் இலங்கை வேகப்பந்து வீச்சாளர்களின் தாக்குதலில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
அத்துடன் அணித்தலைவர் டெம்பா பவுமா (Temba Bavuma) மட்டும் நிலைத்து நின்று ஆட, ஏனைய வீரர்கள் ஆட்டமிழந்ததால் தென் ஆப்பிரிக்கா 191 ஓட்டங்களுக்கு சுருண்டது.
மேலும் பவுமா 117 பந்துகளில் ஒரு சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 70 ஓட்டங்கள் எடுத்தார். இலங்கையின் தரப்பில் அசிதா பெர்னாண்டோ, லஹிரு குமாரா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.