ஐபிஎல் 2025 மெகா ஏலம்....!

tubetamil
0

ஐபிஎல் 2025 சீசனுக்கான மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில், ஒவ்வொரு அணிகளும் தக்கவைத்துக் கொள்ளும் வீரர்கள் தொடர்பில் நேற்றையதினம் அறிவித்தன.

இந்நிலையில் ஒவ்வொரு அணியிடம் மீதம் எத்தனை கோடி உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.



அதற்கமைய, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) , கொல்கத்தா நைட் ரைடர்ஸ்(KKR) , மும்பை இந்தியன்ஸ் (MI) , லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் LSG) , சன்ரைசர்ஸ் ஐதராபாத் (SRH) , குஜராத் டைட்டன்ஸ் (GT) ஆகிய அணிகள் 5 வீரர்களை தக்க வைத்துள்ளது.

பஞ்சாப் 2 ( PBKS) , ஆர்சிபி 3 (RCB) , டெல்லி 4 (DELHI) , ராஜஸ்தான் ரோயல்ஸ் ( RR) 6  என வீரர்களை தக்க வைத்துள்ளனர்.


தொகை விபரம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் ரூ.55 கோடி

மும்பை இந்தியன்ஸ் அணியிடம் ரூ.45 கோடி

லக்னோ அணியிடம் ரூ.69 கோடி

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியிடம் ரூ.45 கோடி

குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் ரூ.69 கோடி

பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் ரூ.110.5 கோடி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் ரூ.51 கோடி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் ரூ.41 கோடி

ஆர்சிபி அணியிடம் ரூ.83 கோடி

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியிடம் ரூ.73 கோடி

அதிகபட்சமாக பஞ்சாப் அணியிடம் ரூ.110.5 கோடியும் குறைந்த பட்சமாக ராஜஸ்தான் அணியிடம் ரூ.41 கோடியும் உள்ளது.

எனவே பல முக்கிய வீரர்கள் தங்களுடைய அணியிலிருந்த விடுவிக்கப்ட்டுள்ளதால் பஞ்சாப் அணி முக்கிய வீரர்களை வாங்குவதற்கு வாய்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top