சூது கவ்வும் 2 வெளியாகும் திகதியை அறிவித்த மிர்ச்சி சிவா

tubetamil
0

கடந்த 2013ஆம் ஆண்டு நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த திரைப்படம் தான் சூது கவ்வும்.


இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் சஞ்சிதா ஷெட்டி,ரமேஷ் திலக்,அஷோக் செல்வன்,பாபி சிம்ஹா,கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.


வித்தியாசமான கதை அம்சத்துடன் உருவான இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. விஜய் சேதுபதியின் கேரியரிலும் மிக முக்கியமான படமாக சூது கவ்வும் திரைப்படம் காணப்பட்டது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது 



இந்த படம் வெளியாகி 11 ஆண்டுக கடந்துள்ள நிலையில் இதன் இரண்டாவது பாகம்  ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்த படத்தை சி. வி குமார் தயாரித்துள்ள நிலையில் இயக்குனர் எஸ். கே ஆர்ஜூன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.



அத்துடன் சூது கவ்வும் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிகர் மிர்ச்சி சிவா நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடிக்க  உள்ளதாகவும் கூறப்படுகின்றது. மேலும் ரமேஷ்,திலக் கருணாகரன் , கவி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள்.


சூது கவ்வும் படத்தின் இரண்டாவது பாகத்தின் ரிலீஸ் தேதி தற்போது படக்குழுவினர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் டிசம்பர் 13ஆம் தேதி சூது கவ்வும் படம் திரையரங்கங்களில் வெளியாக  உள்ளது. 


https://twitter.com/i/status/1859109930743328960

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top