பான் இந்தியன் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகர் பிரபாசின் நடிப்பில் கடந்த வருடம் லார் மற்றும் இந்த ஆண்டு வெளிவந்த கல்கி ஆகிய இரண்டு திரைப்படங்களும் மாபெரும் வெற்றியடைந்துள்ளது.
இதில் கல்கி திரைப்படம் உலகளவில் ரூ. 1100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அடுத்ததாக பிரபாஸ் ராஜாசாப் எனும் படத்தில் நடித்து வருகிறார். மேலும் பிரபாஸ் கைவசம் Fauji, சலார் 2, ஸ்பிரிட் ஆகிய படங்கள் உள்ளன.
இந்த நிலையில், சலார் படத்தை தயாரித்த Hombale Films நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகவுள்ள மூன்று படங்களில் நடிப்பதற்காக பிரபாஸ் பெறவுள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
கேஜிஎப், காந்தாரா, சலார் ஆகிய படங்களை தயாரித்து இன்று இந்திய சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக உயர்ந்துள்ளது Hombale Films. இவர்களுடைய தயாரிப்பில் அடுத்ததாக பிரபாஸ் மூன்று படங்களில் கமிட்டாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மூன்று படங்களுக்கு சேர்த்து ரூ. 575 கோடி சம்பளமாக பிரபாஸ் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.