ஓட்டும் போது செல்போனில் பேசினால் 6 மாத சிறை - ஜப்பானில் நடைமுறை

tubetamil
0

 ஜப்பானில் சைக்கிள் ஓட்டும் போது செல்போனில் பேசினால் கூட 6 மாதம் சிறை தண்டனை என அந்த நாட்டு அரசு அதிரடியாக உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது.



இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, 


சைக்கிளில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கிக் கொள்வதால் அதை கட்டுப்படுத்தும் விதமாக இந்த அதிரடி உத்தரவை ஜப்பான் அரசாங்கம் பிறப்பித்துள்ளது. 


சைக்கிள் ஓட்டும்போது செல்போன் பேசவோ, இணையத்தை பயன்படுத்தவோ கூடாது. இதனை மீறுபவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை அல்லது சுமார் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.


இதுதவிர மதுபோதையில் சைக்கிள் ஓட்டினாலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது சுமார் ரூ.2¾ லட்சம் அபராதம் விதிக்கும் வகையில் போக்குவரத்து விதிமுறைகளில் திருத்தத்தை ஜப்பான் அரசு கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top