கனடாவில் ஈழத்தமிழர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது மகனை கைது செய்துள்ளதாக அந்த நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம், பகுதியை சொந்த இடமாக கொண்ட 66 வயதான நபரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஸ்காபுரே பகுதியிலுள்ள அவரது வீட்டில் வைத்து குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் 32 வயதான மகன் கைது செய்யப்பட்ட பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட பிரச்சைனை காரணமாக மகன் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தாக தெரிவிக்கபட்டுள்ளது.