பிக் பாஸ் சீசன் 8ல் இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என தகவல் வெளியாகிய நிலையில் அன்ஷிதா தான் இந்த வாரம் வெளியேறினார் என கூறப்படுகிறது.
அதே போல வைல்டு கார்டு என்ட்ரி குறித்தும் நேற்று வெளிவந்த தகவலில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. டி.எஸ்.கே, ராணவ், வர்ஷினி வெங்கட், மஞ்சரி, சிவாஜி தேவ் ஆகிய 5 போட்டியாளர்கள் புதிதாக களமிறங்கி இருப்பதாக தகவல் வெளிவந்தது.
ஆனால், இதில் டி.எஸ்.கே பிக் பாஸ் 8ல் வைல்டு கார்டு என்ட்ரியாக வரவில்லை, அது பொய்யான தகவல் என தெரியவந்துள்ளது. ஆனால், ராணவ், வர்ஷினி வெங்கட், மஞ்சரி, சிவாஜி தேவ் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
இவர்கள் நால்வருடன் இணைந்து தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வில்லனாக நடித்து பிரபலமான நடிகர் ராயன் மற்றும் ரியா தியாகராஜன் என்பவரும் வைல்டு கார்டு என்ட்ரியில் வந்துள்ளனர். இதன்மூலம் மொத்தம் 6 போட்டியாளர்கள் வைல்டு கார்டு என்ட்ரி கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.