ஈரான் இஸ்ரேலை அழிப்பதற்காக அணு குண்டுகளை உருவாக்கி கையிருப்பில் வைத்துக் கொள்ள முயல்வதாக முயல்வதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் இன்றைய தினம்(19) பேசிய அவர் ,
இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பேசிய நெதன்யாகு, இந்த தாக்குதலால் ஈரானின் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை உற்பத்தித் திறன்களைக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருப்பதாகக் கூறியிருக்கிறார்.
அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், "இது ஒன்றும் பெரிய சீக்ரெட் இல்லை. எங்கள் தாக்குதலில் ஈரான் நாட்டின் அணுசக்தி திட்டத்தில் சில பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அவர்கள் அணு ஆயுதங்களை உருவாக்க முயன்று வரும் நிலையில், அதை எங்கள் தாக்குதல் தடுக்கவில்லை. ஈரான் பல அணு குண்டுகளை உருவாக்க முயல்கிறது.
ஈரான் எங்களை அழிப்பதற்காக அணு குண்டுகளை உருவாக்கி கையிருப்பில் வைத்துக் கொள்ள முயல்கிறது. ஏற்கனவே ஈரான் வசம் நீண்ட தூரச் சென்று தாக்கும் ஏவுகணைகள் உள்ள நிலையில், அடுத்த கட்டமாகக் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை உருவாக்க ஈரான் முயல்கிறது" என அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் ஈரான் இடையே பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த மாதம் தாங்கள் நடத்திய தாக்குதல் தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.