ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களில் திண்மக் கழிவு முகாமைத்துவ நடைமுறைகளை மேம்படுத்துவதற்காக கொரிய அரசாங்கம் இலங்கைக்கு நிதியுதவி வழங்கியுள்ளது.
அதனடிப்படையில், 10.20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் 2024 முதல் 2028 காலகட்டத்தில் உள்ளூராட்சி மட்டத்தில் திண்மக்கழிவு மேலாண்மை பொறிமுறையை நிறுவும் மறைமுக பொருளாதார மேம்பாட்டு திட்டத்தைச் செயல்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.