நடிகர் சூர்யா நடித்த திரைப்படங்களில் இந்த அளவுக்கு ட்ரோல் செய்யப்பட்ட படங்களில் எதுவும் இல்லை என்னும் அளவுக்கு கங்குவா திரைப்படம் அமைந்துள்ளது.
மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட ஆதிபுருஷ், இந்தியன் 2, தேவரா படங்கள் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டதை போல கங்குவா திரைப்படமும் ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றது.
மேலும் இயக்குநர் சிறுத்தை சிவா சூர்யாவை வைத்து செய்துவிட்டார் என்றும் சூர்யா படத்தைப் பார்க்காமலே இத்தனை புரமோஷன்களை செய்து மக்களை ஏமாற்றினாரா? அல்லது படத்தைப் பார்த்துவிட்டு எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என நினைத்து இந்த மோசடியை செய்தாரா? என பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் காது ரிப்பேர் ஆயிருச்சு: கங்குவா படம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், ஏகப்பட்ட இன்ஸ்டா ரீல்ஸ் போடுபவர்கள் இந்தியன் 2வுக்கு குதிரை போல ஓடி போட்டதை போல இந்த படத்தை பார்த்து விட்டு காது ரிப்பேர் என வீடியோ போட்டு கிண்டல் செய்து வருகின்றனர். அதுவும் குறிப்பாக பெண்கள் எல்லாம் கலாய்க்க ஆரம்பித்திருப்பது சூர்யா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நெருப்பு மாதிரி இருக்கும்னு: காதில் பஞ்சை வைத்து கட்டிக் கொண்டு செல்லும் வயதான பெண் ஒருவரை கோலம் போடும் இளம் பெண் அழைக்க கேட்காதவர் போல செல்லும் அந்த அக்காவை நிறுத்தி அந்த இளம் பெண் என்ன ஆச்சு எனக் கேட்கிறார். அதற்கு என் பையன் நெருப்பு மாதிரி இருக்கும் என ஒரு படத்துக்கு அழைத்துச் சென்று வெறுப்பேத்துற படத்தைக் காட்டினான். அங்கே அவர்கள் போட்ட சத்தத்தால் காது கிழிந்து விட்டது. இன்னும் 2 நாளைக்கு இப்படித்தான் இருக்கும் என சொல்லிவிட்டு நகர்கிறார்.
இப்படியெல்லாம் வன்மத்தை கக்கினால் 2000 கோடி வசூலை எப்படி எடுக்கிறது. நான் தியேட்டருக்குத்தான் போய் பார்ப்பேன். இவங்க சும்மா சொல்றாங்கன்னு அந்த பெண் போய் பார்த்துவிட்டு அடுத்த நாள் கோலம் போடும் போது அவருடைய காதிலும் பஞ்சை வைத்து கட்டுக் கட்டியிருப்பது போலவும் இருவரும் டாக்டரை பார்க்க செல்வது போலவும் ரீல்ஸ் போட்டு மரண கலாய் கலாய்த்து வருகின்றனர். இந்த அவமானம் 300 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட ஒரு படத்துக்குத் தேவையா என சூர்யாவின் ஹேட்டர்கள் அதை ஷேர் செய்து ட்ரோல் செய்து வருகின்றமாய் குறிப்பிடத்தக்கது.