இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி தற்சமயத்தில் உலகின் சிறந்த கிரிக்கெட் வீரராக கருதப்படுகிறார்.
இந்தியாவுக்காக கடந்த 2008 அண்டர்-19 உலகக் கோப்பையை கேப்டனாக வென்ற அவர் சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அப்போதிலிருந்து 3 வகையான கிரிக்கெட்டிலும் பெரும்பாலான போட்டிகளில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் அவர் 27,000க்கும் மேற்பட்ட ரன்களையும் 80 சதங்களையும் அடித்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிரபல தனியார் நிறுவனம் ஒன்று ஜோதிடர் ஒருவரை அழைத்து விராட் கோலியின் எதிர்காலம் குறித்த சில கேள்விகல் எழுப்பப்பட்டது.
ளித்த ஜோதிடர் கூறுகையில் : சமீப காலமாகவே என்னிடம் விராட் கோலி எவ்வளவு காலம் விளையாடுவார்? என்று கேள்வி முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்த கேள்விக்கு நான் கூறும் பதில் ஒன்றுதான் : மக்கள் விராட் கோலி விளையாடுவதை பார்ப்பதற்கு ஆவலாக காத்திருக்கின்றனர். என்னை பொறுத்தவரை விராட் கோலி 2027 ஆம் ஆண்டு வரை நிச்சயம் விளையாடுவார். அதிலும் குறிப்பாக எதிர்வரும் பார்டர் கவாஸ்கர் தொடரில் அவரது ஆட்டம் மிகச்சிறப்பாக இருக்கும். இனிவரும் சில ஆண்டுகள்தான் விராட் கோலி தனது உச்சகட்டமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். அதனால் நீங்கள் அனைவரும் எதிர்பார்த்தபடியே உங்களது நட்சத்திர வீரர் அசத்துவார்" என அவர் தெரிவித்துள்ளார்.