முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு செலவினங்களுக்காக வருடாந்தம் ஒதுக்கப்படும் நிதியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கே அதிகம் செலவிடப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதிகளுக்காக 110 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் மகிந்தவுக்காக 32 கோடி 65 லட்சத்து 82 ஆயிரம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதில் சந்திரிகா குமாரதுங்க 9 கோடி 88 லட்சத்து 71ஆயிரத்து 866 ரூபாயும் , மகிந்த ராஜபக்ச 32 கோடி 65 லட்சத்து 8271 ஆயிரத்து 819 ரூபாயு ம் ,மைத்திரிபால சிறிசேன 18 கோடி 51 லட்சத்து 66 ஆயிரத்து 535 ரூபாயும்,
கோட்டாபய ராஜபக்ஷ 3 கோடி 91 லட்சத்து 41 ஆயிரத்து 488 ரூபாயும், ஹேமா பிரேமதாச 2 கோடி 98 லட்சத்து 78 ஆயிரத்து 008 ரூபாயும், ரணில் விக்கிரமசிங்க 25 கோடி 33 லட்சத்து 95 ஆயிரத்து 249 ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது
அத்துடன் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாவலர்களுக்கான மின்சார கட்டணம், குடிநீர் கட்டணம், உணவு மற்றும் குடிநீர், தங்குமிடம், போக்குவரத்து செலவுகள் என மொத்த செலவுகள் 110 கோடி ரூபாயை தாண்டுவதாக தெரியவந்துள்ளது.