சிவப்பு எச்சரிக்கை: கனமழை மற்றும் பலத்த காற்று மேலும் தீவிரமடையலாம்

tubetamil
0

 


தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 25-ம் தேதி தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.


மேலும் தீவிரமடைந்து இலங்கையின் வடக்கு கடற்கரையை நோக்கி நகரலாம்  என வானிலை ஆய்வுத் திணைக்களம்  சிவப்பு வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளது 


கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.


நவம்பர் 24 ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை மன்னாரிலிருந்து காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளுக்குச் செல்ல வேண்டாம் என கடற்படை மற்றும் மீனவ சமூகங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



இந்த பகுதிகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணிக்கு (60-70) கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம்.


பதுளை, காலி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்வரும் நவம்பர் 24 ஆம் திகதி முதல் நவம்பர் 26 ஆம் திகதி வரையான காலநிலை சீரற்ற காலநிலை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top