இலங்கை - நியூசிலாந்து கிரிக்கெட் போட்டிக்கான நிகழ்நிலை பற்றுச்சீட்டு விற்பனை நவம்பர் 6 முதல் தொடங்கவுள்ளது.
இந்நிலையில் கொழும்பு 07 வித்யா மாவத்தை மற்றும் தம்புள்ளை கிரிக்கட் மைதானத்தில் நிறுவப்பட்டுள்ள பற்றுச்சீட்டு விற்பனை நிலையங்களும் நவம்பர் 07 ஆம் திகதி முதல் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இதேவேளை, ரி20 போட்டிகள் நடைபெறும் நாட்களில் தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தின் பிரதான வாயிலுக்கு அருகில் சிறிய பற்றுச்சீட்டு விற்பனை நிலையம் ஒன்றும் நிறுவப்படும்.
மேலும் நவம்பர் 15 ஆம் திகதி முதல் பல்லேகல மைதானத்தில் பற்றுச்சீட்டு விற்பனை செய்யப்படவுள்ளதுடன், ODI நாட்களில் பலகொல்ல அபித மைதானத்திலும் பற்றுச்சீட்டுகளை வாங்க முடியும்.
அத்துடன் பற்றுச்சீட்டு விற்பனை நிலையங்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், போட்டி நாட்களில் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.எனவும் தெரிவிக்கப்படுகிறது.