கொழும்பு, நாரஹேன்பிட்டியில் 58 இலங்கையர்கள் அடங்கிய குழுவொன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இணையம் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே குறித்த குழு கைது செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் கிருலப்பனை அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த மோசடியில் இந்தியா, சீனா உட்பட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கையில் தங்கியிருந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த குற்றச்சாட்டின் கீழ் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.