செட்டிக்குளத்தில் கடத்தப்பட்ட மாடுகள் மீட்பு

tubetamil
0

 செட்டிகுளம் பகுதியில் இருந்து மாத்தறைக்கு லொறி ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட 12 எருமை மாடுகள் மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.



குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, 



வவுனியா மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனைக்கு அமைவாக வவுனியா மாவட்ட குற்றப் தடுப்பு பிரிவின் தலைமைப் பொலிஸ் பரிசோதகர் எம்.கே.அழகியவண்ண தலைமையில் உப பொலிஸ் பரிசோதகர் ஜே.கே.எஸ்.ராஜகுரு, பொலிஸ் சார்ஜன்ட் ஹேரத் (51602), பொலிஸ் கொன்ஸ்தாபிள்களான ஜெயசிங்க (71309), விதுசன் (91800), ஹேரத் (34712), டினவி (18129) ஆகியோரை உள்ளடக்கிய பொலிஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போதே மாடு கடத்தல் முறியடிக்கப்பட்ட்டமை குறிப்பிடத்தக்கது.






கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top