பாலிவுட் ஷ்ரத்தா கபூர் நடித்த ஸ்த்ரீ 2 திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் ஷாரூக்கானின் பதான் திரைப்படத்தை வசூலில் மிஞ்சியுள்ளது.
தற்போது, கனடாவில் ஹாலோவீன் பண்டிகையிலும் அந்த திரைப்படம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்த்ரீ 2 என்னும் அந்த திரைப்படத்தில், ஆண்களை மயக்கி கடத்திச்செல்லும் ஸ்திரீ என்னும் ஒரு பெண்ணின் ஆவி நடமாடும்.
ஆகவே, அந்த ஆவி வருவதைத் தவிர்ப்பதற்காக, ’பெண்ணே, நாளைக்கு வா’ என எல்லா வீடுகளின் முன்னாலும் எழுதியிருப்பார்கள்.
அதை எழுதாத வீட்டுக்குள் அந்த ஆவி நுழைந்து, அந்த வீட்டிலுள்ள ஆணைக் கடத்திச் சென்றுவிடும். இன்னமும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அந்த திரைப்படம், கனடா வரை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் பிராம்ட்டன் நகரில் ஹாலோவீன் பண்டிகைக்காக ஒரு வீட்டின் முன் அலங்கரிக்கப்பட்டுள்ள பொம்மை ஒன்று, ஸ்த்ரீ 2 என்னும் திரைப்படத்தில் காட்டப்பட்டுள்ள ஆவியைப்போல வடிவமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அதற்கு அருகில் அந்த திரைப்படத்தில் காட்டப்படுவதுபோலவே, பெண்ணே, நாளைக்கு வா’ என்றும் எழுதப்பட்டுள்ளது.
அந்த வீடியோ வைரலாகியுள்ளதுடன், அந்த படத்தில் ஆவியாக நடித்த Bhumi Rajgor என்னும் நடிகையும், அந்த வீடியோவின் கீழ், ‘நான் இன்றைக்கே வந்துவிட்டேன்’ என வேடிக்கையாகக் குறிப்பிட்டுள்ளார்.