ஆசனம் கிடைக்காததால் சைக்கிள் எடுத்து ஓடிய கஜேந்திரகுமார் சுமந்திரன் தெரிவிப்பு ...!!!

tubetamil
0

 ஆசனம் கிடைக்காததால் சைக்கிள் எடுத்து ஓடிய கஜேந்திரகுமார் இப்போது  கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் அரசியல் நாடகம் போட்டு வருவதாக ழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 



யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.



குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்து முதலில் வெளியேறியவர்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர்தான்.


2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், தமிழ் மக்களைக் கொன்றழித்த சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம் எடுத்தபோது மேடையில் ஒன்றாக இருந்தவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். அதன் பின்னர் பாராளுமன்றத் தேர்தலின்போது ஆசனப் பங்கீட்டால்  ஏற்பட்ட முரண்பாட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு அவர் வெளியேறினார்.


ஆசனம் கிடைக்காததால் சைக்கிள் எடுத்து ஓடிவிட்டு இன்று வரை நாட்டில் நடப்பது எல்லாவற்றுக்கும் தமிழரசுக் கட்சிதான் காரணம் என்று வெற்று அரசியல் நாடகம் போட்டு வருகின்றனர் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர்.


உங்கள் கட்சியிள் இருக்கும் ஓட்டைகளைப் பார்க்க ஆளில்லை. நீங்கள் தமிழரசுக் கட்சி உடைந்து விட்டதாகக் கண்ணீர் வடிக்கின்றீர்கள் என  அவர் தெரிவித்துள்ளார்.



Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top