இலங்கையில் சிரேஸ்ட சுகாதார அதிகாரிகள் போன்று நடித்து, பணம் வசூலிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குழு தொடர்பில் சுகாதார அமைச்சு , சுகாதார ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விசேட எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி தொலைபேசி, வாட்ஸ்அப் அல்லது பிற வழிகளில் நிதி கோர எந்த அதிகாரிக்கும் அதிகாரம் இல்லை என்று அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
எனவே வங்கிக் கணக்குகளிலோ அல்லது வேறு எந்த வழிகளிலோ பணத்தை பரிமாற்றம் செய்வதன் மூலம் இந்த மோசடிகளுக்கு பலியாக வேண்டாம் என்று மக்களை அமைச்சகம் கேட்டுள்ளது.
இந்த மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக ஏற்கனவே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கையின் சுகாதார அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்லாமை குறிப்பிடத்தக்கது.