அமரன் படம் தீபாவளிக்கு வெளிவந்து வசூலில் பட்டையை கிளப்பி கொண்டு வரும் நிலையில் உலகளவில் ரூ. 294 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
இந்தப்படமானது சிவகார்த்திகேயனின் கேரியரில் பெஸ்ட் திரைப்படமாக மாறியுள்ளது.
இதே வேளை தெலுங்கானாவில் லியோ படம் ரூ. 45 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்தது. இந்நிலையில், இதுவரை 18 நாட்களில் தெலுங்கானாவில் மட்டுமே அமரன் படம் ரூ. 41 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
அத்துடன் இந்த வாரத்தின் இறுதிக்குள் லியோ படத்தின் இந்த வசூல் சாதனையை, அமரன் படம் முறியடித்துவிடும் என கூறப்படுகிறது.