முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின்(Lohan Ratwatte) உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksa) மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம(Dilum Amunugama)ஆகியோர் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு விஜயம் செய்துள்ளார்.
இந்த விஜயம் நேற்று (01) இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவியின் மிரிஹான வீட்டில் சொகுசு கார் ஒன்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், அவர், கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், அவரை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மகிந்த விஜயம்! | Visit To Mahinda Welikada Jail Hospital
உடல் நலக்குறைவு காரணமாக நீதிமன்றில் மருத்துவ தேவைகளை முன்வைத்து பெறப்பட்ட உத்தரவின் மூலம் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட லொஹான் ரத்வத்த தற்போது மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.