தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் நடித்து தி பல ஹிட் படங்களை கொடுத்தவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இந்நிலையில் பாலிவுட்டிலும் அட்லி தயாரிப்பில் வருண் தவானுடன் இணைந்து நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். பேபி ஜான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் வரும் டிசம்பர் மாதம் 25ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
இவ்வாறான நிலையில், வருண் தவானுடன் கீர்த்தி சுரேஷ் ஆட்டம் போட்டுள்ள பாடல் தற்போது ரிலீசாகியுள்ளது.
இந்த படத்தில் பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள பேபி ஜான் படம் வரும் டிசம்பர் 25ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்த படம் விஜய்யின் தெறி படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளது. பேபி ஜான் படத்தை பிரபல இயக்குநர் அட்லி தயாரித்துள்ள நிலையில் காலிஸ் இயக்கியுள்ளார்.
பேபி ஜான் பட பாடல்: விஜய், சமந்தா உள்ளிட்டவர்கள் நடித்து வெளியான தெறி படம் மிகச் சிறப்பான விமர்சனங்களையும் வரவேற்பையும் வசூலையும் குவித்தா நிலையில் தெறி போன்று ரசிகர்களை பேபி ஜான் படம் கவருமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்நிலையில் இந்த படத்தில் வருண் தவானுடன் கீர்த்தி சுரேஷ் ஆட்டம் போட்டுள்ள பாடல் இன்றைய தினம் வெளியாகியுள்ளது. இந்த பாடலில் அவர் வருண் தாய்வானுடன் இணைந்து மிகப்பெரிய அளவில் கவர்ச்சியை காட்டியுள்ளார்.