ஜோதிடர்களின் வீட்டில் அரசியல்; முன்னாள் எம்.பிக்களின் புதிய முயற்சி!

tubetamil
0

 சமகால அநுர அரசாங்கம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்து முன்னாள் அரசியல்வாதிகள்  தமது ஆஸ்தான ஜோதிடர்களிடம் ஆலோசனை பெற்று வருவதாக தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.


குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, பொதுத் தேர்தலின் போது சரியான முறையில் செயற்பட்ட போதும், தாம் தோல்வி அடைந்துள்ளதாக பல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன வேதனையில் உள்ளனர்.


இந்நிலையில் மீண்டும் தாம் நாடாளுமன்றம் செல்ல என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது.



அத்துடன் தற்போதைய அரசாங்கத்தை தோற்றக்கடிக்க வழிமுறைகள் உள்ளதா என்பது குறித்தும் பலர் பரிசிலித்து வருவதாக அரசியல் மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top