யாழ்பாண கூட்டத்துக்கு பல மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மக்களை இறக்கிய ஜனாதிபதி - சுமந்திரன் விமர்சனம்

tubetamil
0

 ஏதோ விசித்திரமான காரணத்திற்காக ஜனாதிபதி நேற்று மாலை ஆயிரம் பேரை பஸ்கள் மூலமாக யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்து உரையாற்றியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.


இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்,



இவ்வாறு பஸ்களில் ஏற்றி வந்தவர்களின் சொந்த மாவட்டங்களுக்கு ஜனாதிபதி சென்று உரையாற்றியிருந்தால் பயணச் செலவு குறைந்து இருக்கும் என்றார்.


அனுரகுமார திசநாயக்கவின் யாழ்ப்பாண தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்ட சிங்கள மக்களிற்கு தமிழ் மொழிபெயர்ப்பு வழங்கப்பட்டது எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.


குறித்த இதே வேளை  யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் அரசியல் நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top