தேசிய மக்கள் சக்தியின் புதிய அமைச்சரவை நாளை பதவியேற்கிறது
நாளை முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், தேசிய மக்கள் சக்தி அமைச்சரவையில் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் உட்பட 50 பேர் இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.