நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில், ஐ.தே.க யின் யானை சின்னத்தில் போட்டியிட்ட்ட ஜீவன் தொண்டமான் 46438 விருப்பு வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.
இந்த வெற்றி தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
என்னால் முழுமையாக வேலை செய்ய வாய்ப்பு இல்லாவிட்டாலும், முடிந்ததை நாங்கள் வழங்கினோம். இந்த வெற்றி எனது பணி, எனது அர்ப்பணிப்பு மற்றும் எனது மக்களின் நம்பிக்கைக்கு சான்றாகும்.
நம்மை நாமே மேம்படுத்தி, அடுத்த காலப்பகுதியில் அதைச் செயல்படுத்துவது குறித்தும் சிந்திப்போம்.
என்னை நம்பியவர்களை, நான் கைவிடமாட்டேன். என்னை சந்தேகித்தவர்களுக்கு, எனது பணி தொடர்கிறது – எப்போதையும் விட மிக வலிமையாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.