இலங்கை சிறுவனால் ஐரோப்பிய பெண்ணுக்கு ஏற்பட்ட கதி!

tubetamil
0

 இலங்கைக்கு தனது காதலனுடன் வருகை தந்த நெதர்லாந்து நாட்டுப் பெண் ஒருவர் தவறான செயலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



சுற்றுலாப் பயணிகளுக்கு பூ விற்பனை செய்த 15 வயது சிறுவனே இவ்வாறான செயலை செய்துள்ளார்.


குறித்த விடயம் தொடர்பில் போலீசார் மேலும் தெரிவிக்கையில், 30 வயதுடைய நெதர்லாந்து பெண் தனது காதலனுடன் நுவரெலியா, கந்தபொல பகுதிக்கு சென்றிருந்த போது பூ விற்பனை செய்யும் 15 வயது சிறுவன் பூங்கொத்து ஒன்றை கொடுத்துள்ளார்.


இதன்போது சிறுவன் தன்னை கட்டிப்பிடித்து தனது அங்க சேட்டையில் ஈடுபட்டதாக நெதர்லாந்து நாட்டை சேர்ந்த பெண் தனது காதலனுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்துள்ளார்.


அதற்கமைய, பொலிஸார் விசாரணை நடத்தி சிறுவனை அடையாளம் கண்டு கைது செய்துள்ளதாக்க தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் அவரை வெரலவத்தை சிறுவர் தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது






கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top