நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்டவர்கள் நடித்துள்ள அமரன் படம் கடந்த அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களை மேற்கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்ட படக்குழுவினர் தற்போது வெற்றி கொண்டாட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தின் சிறப்புகளில் ஒன்றாக ஜிவி பிரகாஷின் இசையும் அமைந்துள்ளது. இந்நிலையில் அவரது இசைக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் மிகவும் விலை உயர்ந்த பரிசு ஒன்றை நடிகர் சிவகார்த்திகேயன் அவருக்கு அளித்துள்ளார்
இது குறித்து ஜிவி பிரகாஷ் தன்னுடைய மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.