வடக்கு மாகாணத்தில் விவசாயம் பாதிப்பு - நட்டஈடு கிடைத்தாலும் அரிசிக்கு தட்டுப்பாடு!

tubetamil
0

வடக்கில் ஏற்பட்ட மழை  வெள்ளம் காரணமாக  சுமார் 64000 ஹெக்ரயார் நெல் வயல்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.



இதேவேளை மன்னார் மாவட்டத்தில் கூடுதல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுமார் 23000 ஹெக்ரயார் நெல் வயல்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


மேலும் அதிகளவான பகுதிகளில் நெல் விதைக்கப்பட்ட சில தினங்களில் இவ்வாறு மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

  


குளக்கட்டுக்கள் உடைந்ததன் விளைவாகவே  பல பகுதிகள் பெரும் அழிவை சந்தித்துள்ளன.


பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு அரசாங்கம் நட்டஈடு வழங்கினாலும், அடுத்த போகத்தில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாய நிலை காணப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top