ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு கடிதம் அனுப்பிய பிள்ளையான் !

tubetamil
0

 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.



அந்தக்கடிதத்தில் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு வருமாறு தனக்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 25ஆம் திகதிக்குள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வரமுடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.


குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,  ஈஸ்டர் ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக பிரித்தானியாவின் சனல் 4 ஊடகத்திற்கு அவரது முன்னாள் செயலாளரான ஆசாத் மௌலானா உண்மைகளை முன்வைத்தமை தொடர்பான வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காகவே இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டது.


இதேவேளை, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளிநாட்டு தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான காணொளி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top