யாழ் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரினை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி பண மோசடி செய்ததாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் சுயேச்சைக் குழு வேட்பாளராகப் போட்டியிட்ட 49 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பல்வேறு நபர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பணத்தை தனது கணக்கில் வரவு வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளமாய் குறிப்பிடத்தக்கது.