கனடாவின் யுகுன் பகுதியில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலா நடுக்கமானது ஐந்து தசம் மூன்று ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதராகியுள்ளதாக கனடிய இயற்கை வள நிறுவனம் அறிவித்துள்ளது.
எனினும் இந்த நில நடுக்கம் காரணமாக எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. யுகுனின் கெனோன் பகுதியில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
முன்னதாக நிலநடுக்கத்தின் அளவு 5.8 ரிச்டர் என அறிவிக்கப்பட்ட போதிலும் பின்னர் 5.3 ரிச்டர் என திருத்தம் செய்யப்பட்டது.
சில இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த பகுதியில் இதற்கு முன்னர் இவ்வாறு நிலநடுக்கங்கள் எதுவும் பதிவாகவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.