நாட்டை டிஜிட்டல் மயமாக்குவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு தேவையான ஆதரவை வழங்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
காலி, அக்மீமன பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டு மக்களின் எதிர்காலம் வளமானதாக அமைய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
அரசாங்கம் முன்னெடுக்கும் சரியான வேலைத்திட்டத்திற்கு தேவையான ஆதரவு வழங்கப்படும் எனவும் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.