தென்னாப்பிரிக்காவில்(South Africa )நடைபெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 17 பேர் கொண்ட இலங்கை கிரிக்கர் வீரர்கள் பங்கு பற்றவுள்ளதாக இன்று (19) அறிவிக்கபட்டுள்ளது.
அதனடிப்படையில், தனஞ்சய டி சில்வா தலைமையிலான குறித்த குழாமில் பத்தும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரத்ன, தினேஷ் சந்திமால், அஞ்சலோ மெத்யூஸ், குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், ஓஷித பெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம, பிரபாத் ஜெயசூர்ய, நிஷான் பீரிஸ், லசித் எம்புல்தெனிய, மிலன் ரத்நாயக்க, அசித்த பெர்னாண்டோ, விஷ்வ பெர்னாண்டோ, லஹிரு குமார மற்றும் கசுன் ராஜித ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் குறித்த குழாம் எதிர்வரும் நவம்பர் 22ஆம் திகதி தென்னாப்பிரிக்காவிற்குப் பயணமாகவுள்ளது