நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டதால் திறக்கபபட்ட முல்லைத்தீவு - முத்தையன்கட்டு குளத்தின் வான் கதவுகள் மீள மூடப்பட்டுள்ளன.
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு குளங்களின் நீர்மட்டம் அதிகரித்திருந்தன.
இந்தநிலையில், கடந்த 25ஆம் திகதி முத்தையன் கட்டு குளத்தின் நான்கு வான் கதவுகளும் 6 அடி வரை திறந்துவிடப்பட்டன.
இவ்வாறு திறந்துவிடப்பட்ட நீரானது பேராறு ஊடாக நந்திக்கடலை சென்றடைந்து வட்டுவாகல் பாலம் ஊடாக முல்லைத்தீவு பெருங்கடலை சென்றடைகின்றது.
எவ்வாறாயினும், கடந்த 27 மற்றும் 28ஆம் திகதிகளில் வட்டுவாகல் பாலத்தினை மூடி வெள்ளம் பாய்ந்த காரணத்தினால் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டிருந்தது.
இதனையடுத்து, முத்தையன் கட்டு குளத்தின் வான் கதவுகள் மீள மூடப்பட்டுள்ளன.
இதேவேளை,முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்லாயிரம் ஏக்கர் கணக்கான விவசாயசெய்கைகள் மழைவெள்ளத்தினால் மூழ்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.