பொதுத் தேர்தலுக்கான 350,000ற்கும் அதிகமான வாக்காளர் அட்டைகள் தற்போது வரை தபால் நிலையங்களில் தேங்கியுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தபால் திணைக்களத்துக்கு வழங்கப்பட்ட வாக்காளர் அட்டைகளில் 98 சதவீதமானவை தற்போது வீடுகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.
எனவே இதுவரை வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாத வாக்காளர்கள் இன்றைய தினமும் தபால் நிலையத்துக்கு சென்று அவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.