அறுகம்குடா அச்சுறுத்தல் விவகாரம் - பாதுகாப்பு தொடர்பில் இஸ்ரேலுக்கு விடுக்கப்பட்ட உத்தரவாதம்!

tubetamil
0

 இலங்கையில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பில் இஸ்ரேலுக்கு உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



இது குறித்து அவள் மேலும் தெரிவிக்கையில், கிழக்கின், அறுகம்குடாவில்(Arugam Bay Beach) அண்மையில் ஏற்பட்ட அச்சுறுத்தல் குறித்து இலங்கை வந்துள்ள இஸ்ரேலின் பிராந்திய பாதுகாப்பு ஆலோசகர் ரோய் வக்னின், கொழும்பில், பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.


இதன்போதே  மேற்கண்டவாறு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. 


கடந்த மாதம் இலங்கையின் அறுகம்குடா, காலி, ஹிக்கடுவ மற்றும் வெலிகம உள்ளிட்ட பகுதிகளில், பயங்கரவாத அச்சுறுத்தல்களை காரணம் காட்டி, அங்குள்ள தனது குடிமக்களை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு சபை அறிவுறுத்தியிருந்தது.


அத்துடன்,அறுகம் குடா, காலி, ஹிக்கடுவ, வெலிகம மற்றும் அஹங்கம ஆகிய பிரதேசங்களில் உள்ள தமது நாட்டவர்களுக்கான அச்சுறுத்தலை 4 ஆம் நிலைக்கு உயர்த்தியுள்ளதாக இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு சபை தெரிவித்திருந்தது.


இந்த நிலையிலேயே இஸ்ரேலிய அதிகாரி, இலங்கையின் பதில் பொலிஸ் மா அதிபரை சந்தித்துள்லாமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top