மெதமஹனுவர, வத்துலியத்த பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இன்று (20) அதிகாலை அப்பகுதியில் பெய்த கடும் மழையை அடுத்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெல்தெனிய காவல்துறையினர் தெரிவித்தனர்.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, உறங்கிக் கொண்டிருந்த பாடசாலை மாணவன் வீட்டின் மண் மற்றும் சுவர்களுக்கு இடையில் சிக்கி அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் வத்துலியத்த பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவர் என வும் தெரிவிக்கப்படுகிறது.