இயக்குநர் பாலா இயக்கத்தில், அருண் விஜய் நாயகனாக நடித்துள்ள வணங்கான் திரைப்படம் எதிர்வரும் பொங்கல் திருநாளில் வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அருண் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி, மற்றும் பாலாவின் பி ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத் இந்த படத்தில் அருண் விஜய்யுடன் ரோஷினி பிரகாஷ் நாயகியாக நடித்துள்ளதுடன் கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூலையில் இந்தப் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்ட நிலையில் தற்போது “தித்திக்கும் உங்களின் இப் பிறந்த நாளில் தமிழர் திருநாளாம் பொங்கல் நாளில் வணங்கான் வெளியீடு என்ற கரும்பின் சுவையைப் பரிசாகத் தருகிறோம். மகிழ்ச்சியின் இனிப்பு மனதாரப் பரவி, புன்னகை என்றும் எங்கும் வழிந்தோடி, வெற்றியின் பிள்ளைகளைத் தாலாட்டி வென்று வாழ இயற்கையும்.. இறையும் துணை புரியட்டும். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அருண் விஜய்” என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.